Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு! - Asiriyar.Net

Thursday, September 30, 2021

Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!

 


18.09.2021 மற்றும் 21.09.2021 ஆகிய 2 நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi - Tech lab மூலம் Basic Quiz- யினை அனைத்துப் பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது.


இதற்கான வினாக்களையும் , விடைகளையும் அந்தந்தப் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைகளுக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி , மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுபடுத்திட வேண்டும்.


இது போல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad