இந்து சமயத்தில் பல கடவுள்கள் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் முதற்கடவுளாக வணங்கப்படக்கூடியவர் விநாயகப் பெருமான்.
கணங்களின் நாயகன் கணபதி. வினை தீர்ப்பான் விநாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான யானை முகத்தான் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல் நாட்டில் பல இடங்களில் பெரிய விநயகார் சிலைகளை வைத்து வழிபடுவதும், தொடர்ந்து அந்த சுவாமி சிலையை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைக்கப்படுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி எப்போது?
பிள்ளையார் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுத்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 6ம் தேதி சனிக்கிழமை (செப்டம்பர் மாதம் 10ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
விநயாகர் அவதரித்த அந்த நாள் முழுவதும் மிக நல்ல நேரமாக இருந்தாலும், பூஜை செய்ய மிகவும் நல்ல நேரமாக இங்கு சனிக்கிழமைக்கான நல்ல நேரம் மற்றும் கெளரி நல்ல நேரம் இங்கு பார்ப்போம்.
நல்ல நேரம்
விநாயகர் பூஜை செய்ய காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் நல்ல நேரம் உள்ளது. கெளரி நல்ல நேரம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும் பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரையும் நல்ல நேரமாகும்