தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:
* ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும்.
* ஆதிதிராவிடர் மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த 20 இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டப்படும்.
* 1000 விவசாயி களுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர் குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் கட்டப்படும்.
* மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, ஒன்றிய அரசு வழங்குவதற்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் விடுதி மாணாக்கருக்கு விழா நாட்களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
* 512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு மிக்சி வழங்கப்படும். கணினி ஆய்வாகங்களுக்கு இன்வர்ட்டர் வழங்கப்படும்.