தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகு, கொரோனா சூழலை ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் , பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்து முதலமைச்சரிடம் வரும் 15ம் தேதி அறிக்கை தாக்கல் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.