நூலகப் புத்தகங்களின் விவரங்களை EMIS -ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவு ( Books List Attached) - SPD Letter - Asiriyar.Net

Thursday, August 7, 2025

நூலகப் புத்தகங்களின் விவரங்களை EMIS -ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவு ( Books List Attached) - SPD Letter

 




 பள்ளி நூலகங்களுக்குத் தேவையான நூலகப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக , மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தொடக்க நிலை ) வழங்கப்பட்ட நிலையில் , 


அனைத்து வகையான அரசு தொடக்க , நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொண்ட நூலகப் புத்தகங்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது . தற்போது , நூலக புத்தகங்கள் பள்ளி அளவில் இன்னும் பெறப்படவில்லை என்பதும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது . எனவே , அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் இதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 இணைப்பு : மாவட்ட கல்வி அலுவலகம் வாரியாக புத்தகங்கள் அனுப்பப்பட்ட விவரம் :


Click Here to Download - Library Books List Details - Updating in EMIS - SPD Letter - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad