சுதந்திர தின அறிவிப்பில் பணி நிரந்தரம் விடுதலை கிடைக்குமா! பகுதிநேர ஆசிரியர்கள் ஏக்கம்! - Asiriyar.Net

Thursday, August 14, 2025

சுதந்திர தின அறிவிப்பில் பணி நிரந்தரம் விடுதலை கிடைக்குமா! பகுதிநேர ஆசிரியர்கள் ஏக்கம்!

 




சுதந்திர தினத்தை ஒட்டி இம்முறையாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்து உள்ளது.


தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறியது:


15 வருட தற்காலிக வேலைக்கு விடுதலை கொடுத்து பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆயிரம் குடும்பங்கள்  எதிர்பார்ப்போடு ஏங்கி வருகிறோம்.


சொற்ப சம்பளம் 12,500 ரூபாயை வைத்து கொண்டு இந்த கால விலைவாசியில் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை.


இந்த 15 ஆண்டில் மே மாதம் சம்பளம் இல்லாமலும், அரசு சலுகை இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி உள்ளது.


பெரும் பகுதி தொகுப்பூதியத்தில் கழிந்துவிட்டது.


எஞ்சி இருக்கும் பணி காலத்தை நல்ல படியாக வாழ எங்களுக்கு காலமுறை சம்பளம் பணி நிரந்தரம் முதல்வர் வழங்க வேண்டும்.


அது திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் சொன்ன 181வது வாக்குறுதி தான்.


இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சரவை கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.


இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள்.


இதனால் தமிழக வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயருக்கும், திமுக ஆட்சிக்கும் புகழ் சேர்க்கும்.


--

சி.செந்தில்குமார்

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

செல்: 9487257203



No comments:

Post a Comment

Post Top Ad