அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8ஆவது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வரும் என்று காத்திருக்கின்றனர்.
ஆனால் அதற்கு முன்னரே மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.
8ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே 7ஆவது சம்பளக் குழுவின் கீழ் கடைசியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் லாபத்தை ஈட்டலாம். அகவிலைப்படி உயர்வு சுமார் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு மாதமும் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடப்படும்.
அந்தக் கணக்கீட்டின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தீர்மானிக்கப்படும்.
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், மே மாதத்தில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த குறியீடுகள் அகவிலைப்படியை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பாதிக்கும் ஒட்டுமொத்த விலை போக்குகள் பற்றிய குறிப்புகளை அவை வழங்குகின்றன.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2025 ஜூலை மாதம் முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதற்கான உத்தரவை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பணவீக்க தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய மோடி அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.
இது 2025 ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 59 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதுவரையில் நாம் உறுதியாகக் கூறமுடியாது. தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கணக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment