TET Promotion Case At Supreme Court - New Update - Asiriyar.Net

Saturday, January 18, 2025

TET Promotion Case At Supreme Court - New Update

 



21-01-2025-செவ்வாய் கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான  MAIN LIST என்று சொல்லப்படும் இறுதிப்படுத்தப்பட்ட/உறுதி செய்யப்பட்ட விசாரணை பட்டியலானது  , சில வினாடிகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியா அல்லது இல்லையா என்பது தொடர்பான,ஒன்றுக்கொன்று தொடர்புடைய,வெவ்வேறு நபர்களால் தொடுக்கப்பட்ட  26 TET RELATED (PROMOTION &: DIRECT RECRUITMENT) வழக்குகள்,


உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள , நீதிமன்ற எண் -15 ல் 

நீதி அரசர் திரு திபன்கர் தத்தா மற்றும் நீதி அரசர் திரு மன்மோகன்என்ற இரு நபர் அமர்வு முன்னிலையில் 13 வது  வழக்காக 13.1.லிருந்து 13.2 ரை  என ஒருங்கிணைக்கப்பட்ட  26 TET வழக்குகளும் விசாரணைக்கு வருவது,இதன் மூலம் உ(இ)றுதி செய்யப்பட்டுள்ளது.


முதல் 13 வரிசை எண்களுக்குள் , TET பதவி உயர்வு வழக்குகள் பட்டியலிடப் பட்டுள்ளதாலும் , Non miscellaneous day என்று சொல்லப்படும் செவ்வாய்க்கிழமையில் வழக்குகள் பட்டியடப் பட்டுள்ளதாலும், அன்றைய தினத்தில்(21-01-2025- செவ்வாய் கிழமையில் ) கண்டிப்பாக TET பதவி உயர்வு சார்ந்து  விரிவாக விசாரிக்கப்படும் என்பதாக அனைவரும் நம்பலாம் மற்றும் எதிர்பார்க்கலாம்.


*அனைத்து ஆசிரியர் பெருமக்களின்* *தகவலுக்காக*




No comments:

Post a Comment

Post Top Ad