மாணவர்களை ஷூ காலால் உதைத்த ஆசிரியர் - கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை - Asiriyar.Net

Sunday, August 11, 2024

மாணவர்களை ஷூ காலால் உதைத்த ஆசிரியர் - கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை

 




சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் தோற்றனர். 


இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர், மாணவர்களை தரையில் அமர வைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 


இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad