மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் வெளியிடப்படுகிறது.
50 வயதை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதை கடந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
பார்வை, செவித்திறன் பாதிப்பு, கற்றல், அறிவுசார் குறைபாடு, புற உலக சிந்தனையற்றோருக்கு விலக்கு. துறைத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.