பணியிலிருந்து ஒய்வு - Superannuation / Re Employment - IFHRMS சார்ந்த பதிவு - மாற்றங்கள் சார்ந்த தெளிவான பதிவு - Asiriyar.Net

Wednesday, August 21, 2024

பணியிலிருந்து ஒய்வு - Superannuation / Re Employment - IFHRMS சார்ந்த பதிவு - மாற்றங்கள் சார்ந்த தெளிவான பதிவு

 




நண்பர்களே வணக்கம்

வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு..

Superannuation...

Re Employment.... 

IFHRMS/களஞ்சியம் சார்ந்த பதவி 


நமது பள்ளிக் கல்வி துறையில் வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு

அந்த கல்வி ஆண்டில் இறுதி வேலை நாள் வரை பணிபுரிய அனுமதி வழங்கப்படுவது 

Re Employment - மறு நியமனம் என்று பெயர்...


நடைமுறையில் நாம் extension என சொல்கிறோம்..

ஆனால் FR இன் படி extension என்பது வேறு பொருள்....


இந்த பதிவின் நோக்கம் ...

IFHRMS/களஞ்சியத்தில் சரியான தகவல் உள்ளீடு செய்வதன் மூலம் தேவையற்ற சிரமங்கள்/காலதாமதத்தை தவிர்க்கலாம்...


1) பணியாளர் வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்ற உடன்...

அவருக்கு pre- retirement entry மற்றும் retirement order entry போட்டால் அவர் ex employee ஆக மாறிவிடுவார்


2) மறு நியமன காலத்தில் ஊதிய பெற Rehire entry மூலம் புதிய IFHRMS I'd creation செய்ய வேண்டும்


3) ஒரே நபருக்கு தற்போது இரண்டு I'd

ஒன்று பழைய I'd ( ex employee ஆக இருப்பார்)


மற்றொன்று Rehire I'd ( active employee ஆக இருப்பார்)


4) retirement benefits ( ஓய்வுக்கால பணப் பலன் GPF closure, DCRG, SPF, EL, UEL) எல்லாம் பழைய I'd ( ex employee I'd) தான் பெற்று வழங்க முடியும்...


5) மறு நியமன காலத்தில் ஊதியம்... 

 புதிய Rehire I'd இல் தான் அந்த மாதம் முடிவுற்ற உடன் பெற்று வழங்க வேண்டும்...


ஆகஸ்ட் மாத ஊதியம்...

செப்டம்பர் 1 க்கு பிறகு தான் வழங்க வேண்டும்...


6) சிலர்  Re Employment period entry க்கு பதிலாக Extension of service entry போட்டு விடுகிறார்கள்...

அது சரியல்ல


தங்களின் புரிதலுக்கு...

Extension of service என்பது அரசு தேவை கருதி ஓய்வு பெற இருக்கும் ஊழியர்களுக்கு "பணி நீடிப்பு வழங்குவது


சில நிகழ்வுகளில்  IAS/ IPS அதிகாரிகள்* மாநில உயர் பொறுப்பில் இருக்கும் போது தேவை கருதி அவர்களுக்கு சில மாதங்கள் அல்லது ஒர் ஆண்டு/ ஈராண்டு பணி நீடிப்பு செய்வதுண்டு...


7) பள்ளி கல்வி துறையில் சிலர் ஆசிரியர்களுக்கு extension of service entry போட்டு விடுவதால்...

அதே I'd இல் தொடர்ந்து ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்..

இது மே மாதத்திற்கு பிறகு அவருக்கு retirement entry நிறைவு செய்யும் போது மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது...


ஜூன் மாதம் 

 அடுத்த பணியாளர் அந்த பதவியில் IFHRMS இல் பணியேற்றுக் கொள்வதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது....


8) GPF employee க்கு கருத்துருக்கள் நான்கு மாதங்களுக்கு முன் OPPAS மூலம் online proposal only...


9) CPS பணியாளர்களுக்கு superannuation date க்கு பிறகு தான் கருத்துருக்கள் அனுப்ப இயலும்...

ஜூலை 31 ஓய்வு எனில் ஆகஸ்ட் 1 க்கு பிறகு கருத்துருக்கள் அனுப்பலாம்....


10) CPS proposal online entry தான்...புதிய முறை என்பதால் பலருக்கு தடுமாற்றம்... Online/offline proposal சார்ந்த வழிமுறைகளுக்கு


 விஜயன் சார் pdf இணைத்துள்ளேன் .


தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 


Click Here to Download - Superannuation / Re Employment - Procedures - Pdf




Post Top Ad