விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாவட்டக் கல்வி (இடைநிலைக்கல்வி) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் திரு.ஆ.கண்ணன் என்பார் நிர்வாக நலனை பாதிக்கும் வகையில்,
திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதிக்குட்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகித்து வரும் நிர்வாகி மற்றும் முதுகலை ஆசிரியர்களை மிரட்டி வருவதாகவும், உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு பேரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு பிரச்சனையை தூண்டி பெரிதாக்குவதாகவும், தொடர்ந்து 5-ஆண்டுகள் அங்கு பணிபுரிவதாலும் அனைத்து மட்டங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மந்தண முறையில் விசாரணை செய்தவகையில் அறியமுடிகிறது. எனவே, நிர்வாக நலன் கருதி மாறுதல் செய்யும்படி பார்வை(2)ல் காணும் கடிதத்தில் புகார் அளித்துள்ளார்.
எனவே, விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேற்படி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் திரு.ஆ.கண்ணன் என்பவருக்கு கரூர் மாவட்டம் தோகைமலை, வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு நிருவாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
மேற்படி பணியாளரைத் தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பணியாளரின் பணிவிடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையை இவ்வியக்ககத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.