மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கொத்தனாா் பழனிசாமி - ரேவதி தம்பதியின் மூத்த மகள் ரூபிகா (18), மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 7.5 % அரசு இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த இவா், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்றவா் ஆவாா்.
இதுகுறித்து மாணவி கூறுகையில், அடிப்படை வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்த தனக்கு மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதே நோக்கமாகும்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டும். என்னைப் போல எங்கள் கிராமத்தில் பல மருத்துவா்கள் உருவாக வேண்டும். கடைக்கோடி கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று மாநிலத்தின் முதல் மாணவியாக தோ்ச்சி பெற்றது பெருமையாக உள்ளது என்றாா்.
No comments:
Post a Comment