+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி - Asiriyar.Net

Thursday, May 9, 2024

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி

 
+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:


• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)


• ஆதார் அட்டை ((Original + Xerox copy)


• Transfer Certificate – TC (Original + Xerox copy). 
Post Top Ad