NMMS - பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்
1. NMMS தேர்வில் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் கலந்து கொள்ளலாம்.
2. உதவித்தொகை:
தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.
3. தகுதி
அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,50,000/- ற்கு மிகாமல் இருக்க வேண்டும். 4. விண்ணப்பிக்கும்முறை:
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு கீழ்க்காணும் விதிமுறைகளை அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு வர வேண்டுமோ அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP), குறிப்பிடப்படும் கைப்பேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி அமைந்திருக்கும் மாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். தாங்கள் குடியிருக்கும் மாவட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.
5.NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விவரத்தினை DGE Portal-ல் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
➤ NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் உள்ள மாணவரின் விவரங்களுடன் சரியாக உள்ளதாக என்பதை உறுதி செய்த பின், திருத்தங்கள் ஏதுமிருப்பின் EMIS இணையதளத்தில் பதிவு செய்த பிறகு DGE Portal ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ( பெயர் மற்றும் கைபேசி எண் உட்பட)
மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்கவேண்டும்.
6. online கட்டணம்:
ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.
7.தேர்வுமுறை:
இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி | - மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)
பகுதி II- படிப்பறிவுத் தேர்வு (Scholastic Aptitude Test) (SAT)
8.பாடத்திட்டம்:
பகுதி I -மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்.
பகுதி II- படிப்பறிவுத் தேர்வைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும்
No comments:
Post a Comment