அரசுப் பள்ளிகளில் நன்கொடை அளிக்க முன் வந்த முன்னாள் மாணவர்கள் ஈடுபடுத்துதல் - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 6, 2023

அரசுப் பள்ளிகளில் நன்கொடை அளிக்க முன் வந்த முன்னாள் மாணவர்கள் ஈடுபடுத்துதல் - SPD Proceedings

 

பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளில், அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் 5,60,056 முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் ஒருங்கிணைய பதிவு செய்துள்ளனர். அதில் 3,68,390 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளார்கள். நன்கொடை வாயிலாக பங்கேற்க முன் வந்த 15,562 முன்னாள் மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த செயல்முறைகள் முதற்கட்டமாக பகிரப்படுகிறது. நன்கொடை வாயிலாக பங்கேற்க முன் வந்த முன்னாள் மாணவர்களை அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் ஈடுபடுத்துதல் குறித்த செயல்முறைகள்:


1. பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் தகவல்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக இச்செயல்முறைகளோடு இணைந்து பகிரப்பட்டுள்ளது. இத்தகவல்களை சார்ந்த பள்ளிகளுக்கு உடனடியாக பகிர்ந்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2. நன்கொடையாளராக


பதிவு செய்த முன்னாள் மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும் அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


3. முன்னாள் மாணவர்கள் வாயிலாக பெறப்படும் அனைத்து வகை நன்கொடைகளும் (பொருள் அல்லது நிதி) நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (https://nammaschool.tnschoolsgov.in/#/) இணையதள பக்க வாயிலாக மட்டுமே பங்களிக்க வலியுறுத்தப்படுகிறது. 4. இது தொடர்பான சந்தேகங்களுக்கு திருமதி. ந. காயத்ரி, மாநில ஒருங்கிணைப்பாளர், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அவர்களை 9788877055 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இணைப்பு : மாவட்ட வாரியாக நன்கொடையளிக்க விருப்பமுள்ள முன்னார் மாணவர்களின் விவரப் பட்டியல்










Post Top Ad