JEE தேர்வு பற்றி தெரிந்து கொள்வோம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 24, 2023

JEE தேர்வு பற்றி தெரிந்து கொள்வோம்

 




இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்காக மிகவும் புகழ் வாய்ந்தது NIT (National Institute of Technology), IIIT (International Institute of Information Technology) மற்றும் IIT (Indian Institute Of Technology). இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால் அதற்கு JEE நுழைவுத்தேர்வு அவசியம் எழுத வேண்டும்.மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு உலகிலுள்ள தலை சிறந்த நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடக்கும்.சிறப்புமிக்க இந்த JEE தேர்வு பற்றி தெரிந்துகொல்வோம்.


JEE தேர்வுக்கு தகுதி என்ன?

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் , வேதியியல் , இயற்பியல் பாடங்களை படித்து இருக்க வேண்டும்.                                                               

அரசுப்பள்ளி , மெட்ரிகிலேஷன் , CBSE போன்ற அனைத்து  பாடத்திட்டங்களில் பயின்றவர்களும் இந்த தேர்வை எழுதலாம்


JEE தேர்வு நடைமுறைகள்:

        [ஒர் ஆண்டிற்கு 2 முறை நடத்தப்பட்ட இத்தேர்வு தற்போது 4 முறை நடத்தப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நான்கு 4 முறை இந்த தேர்வை எழுதலாம். நான்கு முறை  இந்த தேர்வை எழுதுவோர் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கும் தேர்வினை தகுதியாக எடுத்துக்கொள்ளலாம்.]


இரண்டு கட்டமாக இந்த JEE தேர்வு நடத்தப்படுகிறது.

முதல் தேர்வு ( JEE Main ) ஜே.இ.இ மெயின் என அழைக்கப்படுகிறது.

இரண்டாம் தேர்வு ( JEE Advance ) ஜே.இ.இ அட்வான்ஸ் என அழைக்கப்படுகிறது.

ஜே.இ.இ மெயின் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ் இரண்டு தேர்வும் இரண்டு இரண்டுதாள்களை கொண்டது.

ஜே.இ.இ மெயின் தேர்வில் வெற்றி பெற்றால்  NIT , IIIT கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.

IIT கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றால்  ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்வில் தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். 


தெரியாத வினாக்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது நல்லது 

கல்வி நிறுவனங்கள் எங்கு உள்ளன ? (2023 ன் படி)


    தமிழ் நாட்டில் சென்னை ( IIT ) , திருச்சி ( NIT ) யில் உள்ளன.


இந்தியாவில் மொத்தம் 23  IIT கல்வி நிறுவனங்களும் , 31 NIT  கல்வி நிறுவனங்களும் , 19 மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களும் உள்ளன.


என்னென்ன படிப்புகள் உள்ளன?

இளங்கலை படிப்புகள்

பி.டெக்

பி.பார்ம்

பி.டிசைன்

பி.ஆர்க்


முதுகலை படிப்புகள்

எம்.டெக்

எம்.பார்ம்

எம்.எஸ்.சி

எம்.பி.ஏ


    போன்ற இரட்டை படிப்புகளும்,ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகளும் உள்ளன. 60 வதுக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.


Post Top Ad