8th Pay Commission - அரசு ஊழியர்களுக்கு ஊதியம் எவ்வளவு உயரும்? ஒரு மாதிரி கணக்கீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 17, 2023

8th Pay Commission - அரசு ஊழியர்களுக்கு ஊதியம் எவ்வளவு உயரும்? ஒரு மாதிரி கணக்கீடு!

 



31.12.2025 அன்று ஒருவரின் அடிப்படை ஊதியம் ரூ 90,000 என வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் DA 62% ஆக இருக்கக் கூடும்.


PAY + 62% DA ஆக மொத்தம் 90,000 + 55,800 = 1,45,800.


8 வது ஊதியக் குழு குறைந்த பட்ச fitment formula 1.9 ஆக இருக்கும் என கருதப் படுகிறது. Fitment formula இதைவிட சற்று உயர்ந்தாலும் உயரலாம்.


ஊதிய நிர்ணயம்:

31.12.2025 அன்று அடிப்படை ஊதியம் 90,000.


Fitment formula 1.9 ஆல் பெருக்க வேண்டும்.


90,000 X 1.9 = 1,71,000


என ஊதியம் நிர்ணயம் செய்யப் படும்.


01.01.2026 முதல் 31.06.2026 வரை 6 மாதங்களுக்கு மட்டும் DA 0% ஆக இருக்கும்.


01.01.2026 அன்று ஊதியம் + DA விவரம்:


1,71,000 + 0 = 1,71,000.


ஊதிய குழுவினால் கிடைக்கும் அதிகப் படியான ஊதியம்:


1,71,000 - 1,45,800 = 25,200.


HRA, CCA, MA போன்ற படிகள் உயர்வினால் ரூ 5000 வரை கூடுதலாக கிடைக்கலாம்.


ஆக மொத்தம், ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால் ரூ 30,000 வரை ஊதியம் கூடுதலாக கிடைக்கலாம்.


அவரவர் ஊதிய நிலைக்கேற்ப ஊதியம் சற்று கூடுதலாகவோ அல்லது சற்று குறைவாகவோ கிடைக்கலாம்.


மேற்கண்ட கணக்கீடு விவரங்கள் ஒரு மாதிரிக்காகவும், தற்போது VRS மன நிலையில் உள்ளவர்கள் மேற்கண்ட கணக்கீடுகள் மூலம் தெளிவாக முடிவெடுக்க உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் மட்டுமே பகிரப் படுகிறது.


Post Top Ad