இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் - முழு விவரம் - Asiriyar.Net

Friday, October 6, 2023

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் - முழு விவரம்

 



சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த எட்டு நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது அதனை தொடர்ந்து இன்று போராட்டத்தை கைவிடுவதாகவும் அனைவரும் பணிக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர் 


மேலும் அவர்கள் கூறுகையில் சம வேலைக்கு சம ஊதியம்  ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்திற்கு பின் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளோம் 


எங்களின் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர் 


எங்களை யாரும் மிரட்டவில்லை என்றும் நாங்களாவே அரசின் முடிவுகள் உடன்பட்டு இந்த முடிவை ஏற்றுள்ளோம் என்றும் அறிவித்துள்ளனர் 


மேலும் சங்கத்தின் தலைவர் திரு ராபர்ட் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதலால் அவர் இங்கே வரவில்லை என்றும் அறிவித்துள்ளனர் 


No comments:

Post a Comment

Post Top Ad