ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - முழு விவரம் - Asiriyar.Net

Wednesday, October 4, 2023

ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - முழு விவரம்

 




சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் அமைப்பினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.


12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 25-ஆம் நாள் முதலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரி 27-ஆம் நாள் முதலும், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


அதுவம் 28-ஆம் நாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து பேசிய போது, “3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும். பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும்” என்று கூறினார்.




பணி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , மற்ற பிரிவினருக்கு 58 ஆக வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் 





Post Top Ad