போலி சான்றிதழ் - 24 ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 12, 2023

போலி சான்றிதழ் - 24 ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியை

 ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் 24 ஆண்டுகளாக போலிச் சான்றிதழ் கொடுத்து பெண் ஒருவர் ஆசிரியை ஆக பணிபுரிந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா நகர் என்ற ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விஜயபானு என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு  ஆசிரியராக வேலையில் சேர்ந்தார்.


அவர் பணிக்கு சேர்ந்த 24 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது சான்றிதழ்கள் போலி என தொடக்க கல்வி அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது சான்றிதழ் சரி பார்த்த போது அது போலி என்பது உறுதி செய்யப்பட்டது.


இதனை அடுத்து தொடக்க கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 24 ஆண்டுகள் பணி செய்த ஆசிரியர் விஜயபானு என்பவரை விசாரணை செய்து வருகின்றனர்.


போலிச்சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியையாக ஒருவர் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததும் தற்போது ரகசிய புகாரின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட போது அது போலி என கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதும், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Top Ad