கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு வருகிற செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயா் சூட்டப்பட்டு இதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2 பக்கங்கள் கொண்ட விண்ணப்ப படிவத்தில் 13 பிரிவுகளில் விளக்கங்கள் கேட்கப்படடுள்ளன.
இதன்படி, தொலைபேசி எண், வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா, சொத்து நில உடமை, வாகனம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Click Here to Download - Makaleer urimaithokai Application Form - Pdf
No comments:
Post a Comment