ஆசிரியர்களுக்கு Dr. இராதாகிருஷ்ணன் விருது 2023-24 - வழிகாட்டு நெறிமுறைகள் - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 15, 2023

ஆசிரியர்களுக்கு Dr. இராதாகிருஷ்ணன் விருது 2023-24 - வழிகாட்டு நெறிமுறைகள் - Director Proceedings

 



வழிகாட்டு நெறிமுறைகள் (GUIDELINES)

1. அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.


2. மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள் / ஆதிதிராவிட / பழங்குடியினர் நலத்துறை / பிற்பட்டோர் நலத்துறை / சமூக பாதுகாப்புத் துறை / நிதி உதவி பெறும் பள்ளிகள் / ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் அயநிதி / மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


3. இவ்விருது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஈடுபடும்

வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர் கப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது.

4. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது) உட்படாதவராகவும்,


5. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.


6. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.


7. கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருத்தப்பட வேண்டும்.


8. சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டும்.


9. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துருக்கள், பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம் காத்திடல் வேண்டும்.

10.டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் கருத்துருக்கள் அனுப்பப்படல் வேண்டும்.


11. ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் தயார் செய்து 1:2என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை சாதாரண புத்தக வடிவில் தயாரித்து ஒரு நகல் மட்டும் பரளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) அவர்களுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.


12. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

13.மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.


அரசாணையில் தற்போது பின்வரும் எண்ணிக்கை அடிப்படையில் 38 வருவாய் மாவட்டத்திற்கு கீழ்கண்டவாறு விருதுகள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .


Click Here to Download - Dr.Radhakrishnan Award - Guidelines - Director Proceedings - Pdf



Post Top Ad