CPS - அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - சங்கம் வலியுறுத்தல் - Asiriyar.Net

Tuesday, July 25, 2023

CPS - அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - சங்கம் வலியுறுத்தல்

 



தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: நிதியமைச்சரின் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிலைப்பாடு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையும், அரசின் பங்குத்தொகையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழக அரசு தற்போது வரை, ஓய்வூதிய நிதிஒழுங்கு முறைக் குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. மாநில உரிமைகளில் மத்திய அரசோ, அண்டை மாநிலமோ தலையிட முடியாது. நிதியமைச்சர் கருத்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


எனவே, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து தீர்வு கண்டுவரும் நிதியமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கும், மத்திய அரசு குழு மற்றும் ஆந்திர அரசின் முடிவுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad