மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், கல்வி வளர்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே 2வது இடத்தில் உள்ளது. கருணாநிதியால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி விகிதம் பெருமளவு உயர்ந்துள்ளது.
காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் மகத்தான நலத் திட்டங்களை வகுத்து வருகிறோம். கல்வியில் தமிழகம் வகுத்த பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
அனைத்துத்தரப்பு மக்களும் போற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment