திட்டமிட்டபடி 28/7/2023 அன்று போராட்டம் - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 26, 2023

திட்டமிட்டபடி 28/7/2023 அன்று போராட்டம் - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

 
பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் (28/7/2023) நடக்கும் - (TNSE-JACTO ) - 26.07.2023


திட்டமிட்டபடி போராட்டம்


நமது(TNSE-JACTO) தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இன்று (26.07.2023) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28.07.2023) அன்று காலை 11.00 க்கு பள்ளிக்கல்வி இயக்குர் அலுவலக வளாகம் முன்பு நடைபெறும்.


வணக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பேச்சுவார்த்தை ஏறக்குறைய 1.30 மணி நேரம் நடைபெற்றது ஆனால் ஆறு மாதம் எனக்கு கால அவகாசம் வழங்குங்கள் என்பதை தவிர இயக்குனர் வேறு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை


உறுதியான எந்த உத்தரவும் அரசிடமிருந்து பெறப்படாத நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது சரியானதாக இருக்காது என்கிற ஒட்டுமொத்த முடிவின் அடிப்படையில் வரும் 28/7/2023 அன்று திட்டமிடிட்ட படி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்


Post Top Ad