தலைமை ஆசிரியரால் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 29, 2023

தலைமை ஆசிரியரால் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை - CEO Proceedings

 



பள்ளிக் கல்வி இயக்குநரால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்காக நடத்தப்பட்ட ஆய்வு கூட்ட நாள் 18.07.2023 மற்றும் 25.07.2023

பார்வையில் காணும் இயக்குநரால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட இலவச நலத்திட்டங்கள் விவரம், TNDSE appல் மட்டுமே update செய்யப்பட வேண்டும்.


மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து போக்குவரத்து துறை மூலம் படிவங்களை பெற்று மாணவர்கள் விவரங்கள் பூர்த்தி செய்து Google formல் update செய்யப்படவேண்டும்.


6 முதல் 9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களில் மீத்திறன் குறைந்த மாணாக்கர்களை கண்டெடுத்து Bridge Course நடத்தப்பட வேண்டும். 6 முதல் 10ஆம் வகுப்பு வரை எழுதப் படிக்க தெரியாத மாணாக்கர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.


மாணாக்கர்கள் வருகை மற்றும் ஆசிரியர்கள் வருகை இரண்டும் EMIS Portalலில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும். பதிவேடுகளில் பராமரித்தல் கூடாது.


> இலவச நலத்திட்டங்கள் சார்ந்த விவரங்கள் EMIS இணையதளத்தில் மட்டுமே பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

> NEET தேர்வில் தேர்ச்சி பெற்று ஒதுக்கீடு பெற்ற மாணாக்கர்கள் Government quota online விண்ணப்பத்தில் பதிவுகள் மேற்கொள்ளும்போது வரிசை எண்.13(B) Government RTE என தெரிவிக்கப்பட்டுள்ள படிவத்தில் "Yes" என பதியும்படி தலைமை ஆசிரியர்களால் மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கப்படவேண்டும்.


பள்ளிகளின் அட்டவணை (Time table) தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் நிலையில் ஏற்படும் சிக்கல்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் ஆய்வு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.


பள்ளிகளில் ஆசிரியர்களின் விடுப்புகள் EMIS வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

> Healtb screen - State levelல் 30% மட்டுமே பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநில சராசரி 70% விழுக்காட்டினை பெற பாடவேளை அல்லாத ஓய்வு நேரத்தில் இப்பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


கற்றல் குறைபாடுகளில் பின் தங்கிய தொடக்கப் பள்ளிகளில் (Belou performing primary scbools) பின்பற்றப்படுகிற பாடக் குறிப்பேடுகள் (Notes of lesson) கருத்து சார்ந்த (concept oriented) ஆக இருத்தல் வேண்டும். அதற்கான நடவடிக்கை பள்ளித் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.


> தலைமை ஆசிரியர்களுக்கான விடுப்பு எடுக்கும் போது விடுப்பின் தன்மையை EMIS இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பது முதன்மைக் கல்வி அலுவலரால் e-profile update செய்யப்படும்.

மாநில அளவில் Battery testல் வேலூர் மாவட்டம் கடந்த வாரம் முதலிடம் பெற்றது, கடந்த வாரத்தை விட இவ்வாரம் 2% உயர்ந்துள்ளது பள்ளிக் கல்வித் துறையால் பாராட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.


-Health screen - State levelல் 30% மட்டுமே பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநில சராசரி 70% விழுக்காட்டினை பெற பாடவேளை அல்லாத ஓய்வு நேரத்தில் இப்பணி மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.


மணற்கேணி மென்பொருள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1500 தகவல்கள் 2D, 3D மூலம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது) edwizevellore.comல் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் பயன்பட நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

> தொடக்கப்

பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பயிலும் மாணாக்கர்களுக்கு தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய பத்திரிக்கைகள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். (இதனை பிற்பகல் 1.00 to 1.20pm நேரத்தில் செயல்படுத்தலாம்).

மாணாக்கர்களின் நலன் கருதி அரசால் சொல்லப்படும் திரைப்படங்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் கண்டு பயன்பெறும் வகையில் காண்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

-

Single Management நிதி உதவி பெறும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் பணிப்பதிவேடுகளில் பள்ளித் தாளாளர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வகுப்பாசிரியர்கள் மூலம் பாடப்புத்தகங்கள் விவரங்கள் EMISல் பதியப்பட வேண்டும்.

எனவே மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நோட்டுப்புத்தகங்கள் அனைத்திலும் தனிக்கவனம் செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





Post Top Ad