ஒரே ஒரு மாணவர் படித்து வரும் அரசுப்பள்ளி - Asiriyar.Net

Friday, February 3, 2023

ஒரே ஒரு மாணவர் படித்து வரும் அரசுப்பள்ளி

 



பள்ளிக்கூடத்தில் ஒரேயொரு ஆசிரியர் என்ற செய்தியை கேளிவிப்பட்டிருப்போம் ஆனால் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரேயொரு மாணவர் மட்டுமே படித்து வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளபஜார் பகுதியில் TDA தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 3776 சதுரடி பரப்பளவு கொண்ட இந்த பள்ளி 1938ம் ஆண்டு முதலே இயங்கி வருகிறது இப்பள்ளியில் தொடக்கத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தநிலையில் காலப்போக்கில் மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்துவிட்டது.


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 5 மாணவர்களே படித்த நிலையில் தற்போது ஒரேயொரு மாணவர் மற்றும் படித்து வருகிறார். புதுகாலனி பகுதியை சேர்ந்த கோபி என்ற மாணவர் அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பயின்று வருகிறார். தற்போது 4ம் வகுப்பு பயிலும் கோபி தனியாக பள்ளிக்கு வந்து பாடம் படித்து செல்கிறார். அவர்க்கு பாடம் நடத்தும் ஆசிரியர் 70 கிலோ மீட்டர் பயணித்து பள்ளிக்கு வந்து செல்கின்றார்.


பலநாட்களாக வகுப்பறைகள் குப்பைகூடத்தோடு காட்சி அளிக்கும் நிலையில், மேற்குறையின் ஓடுகளும் உடைந்திருக்கின்றன, கழிவறை மூடப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலரிடம் கேட்டப்போது தொடர்புடைய பள்ளி சிறுபான்மை பள்ளி என்றும், மாணவர் சேகரிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையை பள்ளி நிருவாகம் தான் எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து அதிகர்களுக்கு கடிதம் எழுதிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.    


No comments:

Post a Comment

Post Top Ad