ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.02.2023 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது . தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் ( Session ) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website- ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை ( objection ) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் , சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் . நாள் : 22.02.2023 . ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 22.02.2023 பிற்பகல் முதல் 25.02.2023 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது , அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.
Click Here to Download - TNTET 2023 - Paper 2 - Tentative Key Answers
No comments:
Post a Comment