தேசிய அறிவியல் நாள் -2023 | இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும் - Asiriyar.Net

Tuesday, February 28, 2023

தேசிய அறிவியல் நாள் -2023 | இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும்

 




ஒவ்வோர் ஆண்டும்  பிப்ரவரி 28-ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம். நம்முடைய வாழ்க்கையில் அறிவியலும், அறிவியலாளர்களும், அறிவியல் முன்னேற்றங்களும் வழங்கிவரும் முக்கியத்துவமிக்க பங்களிப்பை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக இந்த நாளை அனுசரிக்கிறோம். 


’அறிவியல்’ என்பதை சுருக்கமாக நாம் விவரிக்க முற்பட்டால், அது ஏதேனும் ஓர் உண்மையைப் பற்றிய புலனாய்வுக்காக  பரிசோதனைரீதியான அவதானிப்புகளின் அடிப்படையில் அமைந்த முறைப்படுத்தப்பட்ட அறிவு என்று சொல்லலாம். இந்தச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.        


 உலகப்புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு முறை சொன்னார் : “ அறிவியல் என்பது கெட்டிதட்டிப்போன வறட்டுத் தத்துவங்களைக் கொண்ட மதம் அல்ல; மாறாக, தவறுகளைத் திருத்திக்கொண்டும், புத்தாக்கங்களை முன்வைத்துக் கொண்டும் செல்லும் முன்னேற்றமாகும்.”


அந்தக் கூற்று மிகச்சரியானது. இந்த ஒட்டுமொத்த உலகமே அறிவியல் என்னும் மிக வலிமையான ஒரு கயிற்றினால் பிணைக்கபட்டுள்ளது என்று நாம் கட்டாயமாகக் கூறமுடியும்.  


இன்றைய சூழலில் நாம் அறிந்திருப்பது போல, அறிவியலும், பயன்பாட்டு அறிவியலும் படிப்படியாக மேம்பட்டு வந்திருக்கின்றன. அது நமது வாழ்க்கையை மிக எளிதாகவும்,மேம்பட்ட விதத்திலும் நடத்திச்செல்ல உதவுகிறது. பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடனும், அறிவியல் மனப்பான்மையுடனும் அணுகித்தீர்வு காண்பதற்கு ஒரு திசைவழியைக் காட்டுகிறது. 


எனவே, நாம் அறிவியலைத் தவிர்க்கவே முடியாது. அறிவியல் நமக்கு இவ்வளவு காலமும் வழங்கியிருப்பவை அனைத்தையும் பற்றிய எல்லா நினைவுகளையும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வதற்குப் பயன்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. தேசிய அறிவியல் நாளைப்பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.


                                                                                                                                                                                       *தேசிய அறிவியல் நாளின் வரலாறு :* 


   இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். பிப்ரவரி-28 ஆம்  நாளன்று ஏன் அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது? எப்போது இது முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது?


  இங்கு மேற்கண்ட ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்:


    சர்.சி.வி.ராமன் எனப்பிரபலமாக அறியப்பட்டுள்ள சர். சந்திரசேகர் வெங்கட்ராமன், இந்தியாவின் ஆகப்புகழ் பெற்ற, தன்னிகரற்ற அறிவியலாளராவார்.’ராமன் விளைவு’ என அறியப்படும் தனது ஆய்வுக்கோட்பாட்டைப் பரிசோதனைகளின் மூலம் நிறுவி அதை உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாள்,1928-ஆம் ஆண்டு,பிப்ரவரி,28 ஆகும். 


  அவர் நிகழ்த்தியது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் உலகம் முழுவதிலும் அறியப்பட்டவராக ஆனார். ‘ராமன் விளைவு’ என்ற இந்தக்கண்டுபிடிப்பு காரணமாக, அவர் கவுரவிக்கப்பட்டார்; விருதுகள் வழங்கப்பட்டது.


                                                                                                                                                                               உலகப்புகழ் பெற்ற ‘நோபல் பரிசு’ இயற்பியலில் 1930-ஆம் ஆண்டு ராமனுக்கு வழங்கப்பட்டது. இயற்பியலில் இந்தப் பரிசைப்பெற்ற முதல் ஆசிய அறிவியலாளர், சர்.சி.வி.ராமன்தான்.


                                                                                                                                                                                                      இந்தியாவின் மிக உயரிய விருதான ’பாரத ரத்னா’, இவருக்கு 1954-இல் வழங்கப்பட்டது. அதோடு 1956-ஆம் ஆண்டு உலக அளவில் மதிக்கப்படும் மாபெரும் ‘லெனின் சமாதானப் பரிசு’ ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


                                                                                                                                                                          சர்.சி.வி.ராமனின் ‘ராமன் விளைவு’ என்னும் வரலாற்றுச்சிறப்பு மிக்க மாபெரும் கண்டுபிடிப்பைக் கொண்டாடும் விதத்தில், பிப்ரவரி-28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற முன்மொழிவை நமது மத்திய அரசுக்கு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான தேசியக்கவுன்சில் சமர்ப்பித்தது. அதன்பிறகு, அவர்களுடைய மேற்கண்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு 1986-இல் அனுமதியளித்தது. என்சிஎஸ்டிசி-யின் முன்மொழிவுப்படியே தேசிய அறிவியல் நாளைக் கொண்டாடும் அறிவிப்பையும் வெளியிட்டது. 


                                                                                                                                                                      1987-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று நாடு முழுவதும் முதன் முறையாகத் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது.  


  இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும் :


 தேசிய அறிவியல் நாளின் முதன்மையான நோக்கம், நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வூட்டுவதே. இதோடு கூடுதலாக, குழந்தைகள் அல்லது மாணவர்கள் தமது எதிர்காலப் பணிகளுக்கான பாடமாக அறிவியலைத் தேர்வு செய்வதற்கு உத்வேகம் ஊட்டுவதுமாகும்.


     நமது நாட்டை முற்போக்கான திசைவழியில் இட்டுச்செல்லப்போகும் எதிர்காலச் சந்ததியினர் அவர்கள்தாம் என்பதால் அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. அறிவியலின்பால் தாகங்கொண்டவர்களாக இருக்கும் மாணவர்களைக் கவர்ந்து ஈர்க்கவும், உத்வேகமூட்டவும் அறிவியல் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. 


     இதே போல, நமது எதிர்காலத் தலைமுறையினர் தங்களுடைய அசாதரணமான முயற்சிகளால் அறிவியல் களத்தில் மகோன்னதமான வெற்றிகளை ஈட்டக்கூடியவர்களாவர். ஆம், அது நம் நாட்டின் பெருமிதமாக அமையும்.


   புத்தாக்கத் திறன் வாய்ந்த அறிவியலாளர்கள் அல்லது மாணவர்களின் புதிய புத்தாக்கப் படைப்புகளுக்கு ஆதரவளிப்பதும்,உத்வேகமூட்டுவதும் இந்தக் கொண்டாட்டத்தின் குறிக்கோளாகும். இந்தக்கொண்டாட்டத்தின் மிக முக்கியக்குறிக்கோள் என்பது ஒட்டு மொத்த உலகின் அறிவியல் சாதனைகளையும், அறிவியலின் முக்கியத்துவத்தையும் பற்றி பொதுவெளியில் அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் செய்வதுதான். 


                                                                                                                                                                       இந்த நாளின் மையமான கருக்கள் :


    வெவ்வேறுவிதமான தேசிய, சர்வதேசிய நிகழ்வுகளுக்காக வெவ்வேறுபட்ட மையக்கருக்களைத் தேடுவதில் நீங்கள் ஆர்வங் கொண்டவராக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவேதான்,பின்வரும் தகவல் வரைபடத்தின் மூலம், சமீபத்திய வருடங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் மையக்கருக்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். இனி, நீங்கள் தேசிய அறிவியல் நாளை பிப்ரவரி 28 அன்று உத்வேகத்துடன் கொண்டாடத் தயாராகலாம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.  




National Science Day Theme


1999 was “Our Changing Earth”.


2000 was “Recreating Interest in Basic Science”.


2001 was “Information Technology for Science Education”.


2002 was “Wealth from Waste”.


2003 was “50 years of DNA & 25 years of IVF- in-vitro fertilisation (IVF) – The Blue print of Life”.


The theme of the year 2004 was “Encouraging Scientific Awareness in Community”.


2005 was “Celebrating Physics”.


2006 was “Nurture Nature for our future”.


2007 was “More Crop per Drop”.


2008 was “Understanding the Planet Earth”.


2009 was “Expanding Horizons of Science”.


2010 was “Gender Equity, Science & Technology for Sustainable Development”.


2011 was “Chemistry in Daily Life”.


2012 was “Clean Energy Options and Nuclear Safety”.


2013 was “Genetically Modified Crops and Food Security”.


2014 was “Fostering Scientific Temper”.


2015 was “Science for Nation Building”.


2016 was on "Scientific Issues for Development of the Nation".


2017 was "Science and Technology for Specially Abled Persons"


2018 was "Science and Technology for a sustainable future."


2019 is "Science for the People, and the People for Science"


2020 is "Women in Science.


2021 - "Future of STI: (Science, Technology and Innovation) Impacts on Education, Skills and Work


2022 – “Integrated approach in science & technology for sustainable future”.


2022 - "நிலைப்புறு எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை".


*2023 - “Global Science for Global Wellbeing


*2023 - “உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்”.



No comments:

Post a Comment

Post Top Ad