பள்ளிக்கல்வி ஆணையாளர் பள்ளிகளை ஆய்வு செய்யகிறார் - ஆசிரியர்களுக்கு DEO அறிவுரைகள் - Asiriyar.Net

Wednesday, September 8, 2021

பள்ளிக்கல்வி ஆணையாளர் பள்ளிகளை ஆய்வு செய்யகிறார் - ஆசிரியர்களுக்கு DEO அறிவுரைகள்

 


முதன்மைக்கல்வி அலுவலக தொலைபேசி செய்திக்கிணங்க , தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்கள் மதுரையில் உள்ள பள்ளிகளை 09.09.2021 அன்று ஆய்வு செய்ய உள்ளதால் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி செயல்பட அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 ) அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசமின்றி பள்ளியில் இருத்தல் கூடாது.


2 ) பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வெப்பமாணி ( Thermal Scanner ) கொண்டு சரிபார்த்த பின்னரே பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும்.


3 ) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ( SOP ) - யினை பின்பற்றி ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்.


4 ) அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் தவறாது வைத்திருக்க வேண்டும்.


5 ) அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் / விலையில்லா பாடக்குறிப்பேடுகள் இன்றே ( 08.09.2021 ) வழங்கப்பட்டிருக்க வேண்டும்.


6 ) அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்குரிய பாடவேளை விவரங்கள் ( Time Table ) மற்றும் புத்தாக்க பயிற்சி கட்டகத்தின் விவரங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.


7 ) பள்ளியினை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.


8 ) அனைத்து ஆசிரியர்கள் | அலுவலகப்பணியாளர்களும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.







No comments:

Post a Comment

Post Top Ad