பல்லாவரம் மறைமலையடிகள் அரசு பள்ளிக்கு, நேற்று காலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது பள்ளி கல்வி துறை அமைச்சர் ஏற்கனவே கூறியது போல, 2 மாதங்களுக்கு மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு எளிமையான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதை நான் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.
அதனை மாணவர்கள் பெரிதும் வரவேற்றனர். இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராம் சிட்பண்ட் மூலம் 1 கோடி நிதியை பள்ளிக்காக பெற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment