1 முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு - 8 ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்படும் - அமைச்சர் - Asiriyar.Net

Monday, September 6, 2021

1 முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு - 8 ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்படும் - அமைச்சர்

 


எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, 8ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன.





கொரோனா தொற்று'ஆன்லைன்' வகுப்பு மட்டுமின்றி நேரடி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. கடந்த 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடக்கும் நிலையில், சில இடங்களில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், அவை பள்ளிகள் திறக்கும் முன்பே ஏற்பட்ட பாதிப்பு என தெரியவந்துள்ளது.இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து, வரும் 8ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்பட உள்ளது.


இதுகுறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று அளித்த பேட்டியில், ''ஒரு வார நிலவரத்தை தெரிந்த பின், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, 8ம் தேதிக்கு பின் உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.


அறிக்கை


அதேபோல, இம்மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் நடத்தப்படும் விபரம், மாணவர்களுக்கு கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை பெற, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அடிப்படையில், பள்ளி திறப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம்.




No comments:

Post a Comment

Post Top Ad