தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் ஏ.முருகன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், 9, 10, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்திருக்கிறது. அதனால், சனிக்கிழமை மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் உள்ளன. எனவே, சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.