தடுப்பூசி போட தயங்கும் தேர்தல் பணி அலுவலர்கள் - Asiriyar.Net

Tuesday, March 23, 2021

தடுப்பூசி போட தயங்கும் தேர்தல் பணி அலுவலர்கள்

 







தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தேர்தல் பணி அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.



தேர்தல் பணியில் ஈடுபடு வோருக்கான முதல் கட்டப் பயிற்சி நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அவ்வாறு வந்தவர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதம், கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு சரிசெய்வது, வாக்குப்பதிவின் போது வாக்காளர் களிடமும், அரசியல் கட்சி முகவர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பன குறித்துபயிற்சி அளிக்கப்பட்டது.


அந்த வகையில் விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.இதில் 1,664 அலு வலர்கள் பங்கேற்றிருந்தனர். பயிற்சி நடைபெறும் வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் பணி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளஅறிவுறுத்தப்பட்டனர்.



அந்த வகையில் நேற்று வந்திருந்த தேர்தல் பணி அலுவலர்களில் 127 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஏனையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர். தயக்கத்திற்கான காரணம் குறித்துகேட்டபோது, தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் மயக்கம் வரும், பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகத்தெரிவித்தனர். 



இதையடுத்து தடுப் பூசி மையத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது, "தடுப்பூசி போட்டுக் கொண்டால் சிலருக்கு காய்ச்சல் வர வாய்ப்புண்டு, அது உடனே சரியாகிவிடும். எனவே அச்சப்படவேண்டாம். முதல்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் 28 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை" என்றனர்.




No comments:

Post a Comment

Post Top Ad