11 பள்ளிகளுக்கு கொரோனா அபராதம் - Asiriyar.Net

Tuesday, March 23, 2021

11 பள்ளிகளுக்கு கொரோனா அபராதம்

 






 தஞ்சாவூரில், கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை கடைப்பிடிக்காத, 11 பள்ளிகள், மூன்று கல்லுாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.



தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை, 11 பள்ளிகள், மூன்று கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கொரோனா தொற்று பரவி உள்ளது.கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே மாணவியர், ஆசிரியைகள், கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று, 10 மாணவியருக்கும், ஒரு ஆசிரியைக்கும், மாரியம்மன் கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை கலெக்டர் கோவிந்த ராவ், நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில், சில பள்ளிகளில் ஒன்று அல்லது இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது.



அப்பள்ளிகளில் மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தற்போது ஒன்பது, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவ - மாணவியருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை யுடன் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், கொரோனா தொற்று பரவலுக்கு காரணமான, 11 பள்ளிகள், மூன்று கல்லுாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பதினொன்று பள்ளிகளில் இதுவரை, 6,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad