'தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும்' என, கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்.,6ல் நடக்க உள்ளது. தேர்தலில் ஓட்டுச்சாவடி அமைத்தல், ஓட்டுச்சாவடியில் பணியாளர் நியமித்தல், மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு என, முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது.
பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக சுகாதாரத்துறை அறிவுரையின்படி, தேர்தல் முன் கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அதன்படி, தடுப்பூசி போடுவது கட்டாயம் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment