தபால் வாக்கினை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை சஸ்பெண்ட் ! - Asiriyar.Net

Monday, March 29, 2021

தபால் வாக்கினை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை சஸ்பெண்ட் !

 



தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை!


தென்காசி கல்வி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் பள்ளி ஆசிரியை  தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெளியானதைத் தொடர்ந்து , தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசிச் செய்திக்கிணங்க ,  தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.பழனிநாடார் என்பார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேற்படி ஆசிரியை தன்னுடைய வாக்கை பதிவு செய்த விவரத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் - ல் பதிவு செய்தது தமிழ்நாடு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் , அன்னாரை 28.03.2021 முதல் தற்காலிகப் பணிநீக்கம் செய்து , அதன் ஆணையை 3 நகல்களில் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் இவ்வலுவலகம் அனுப்பி வைத்திட சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர்க்கு உத்தரவு.



தகவலுக்காக :


 வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம்.








No comments:

Post a Comment

Post Top Ad