அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு - சந்திரசேகர ராவ். - Asiriyar.Net

Tuesday, March 23, 2021

அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு - சந்திரசேகர ராவ்.

 






தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதுடன் அவர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.


தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையம் குறித்தவிவாதத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பேசியதாவது:




தெலங்கானாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர் ஊதியதிருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் முதல் தெலங்கானாவில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீத ஊதியஉயர்வு அமல்படுத்தப்படும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 9,17,797 பேர் பயன் அடைவார்கள்.



மேலும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவும் உடனடியாக அமலுக்கு வருகிறது. 61 வயதை அடைந்தவர்கள் ஓய்வு பெறும்போது, காலியிடத்தில் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெறும் வயது75-ல் இருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 180 நாட்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு சந்திரசேகர ராவ் அறிவித்தார். இதற்கு தெலங் கானா அரசு ஊழியர்கள் வர வேற்பு தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad