பெண்களுக்கு பாத வெடிப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. வீட்டில் பாத்திரம் கழுவுவது, உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவது, பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த வழிமுறைகளை கைப்பிடித்தால் எளிதில், உங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம். பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான உயர்தர சிகிச்சை பெற்றாலும் குணமாக நாளாகும். ஆனால், உண்மையில் இதற்கான முழுமையான தீர்வு இயற்கை வழியில் தான் உள்ளது.
இதோ அந்த இயற்கை வைத்தியங்கள்…
1. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
2. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
3. பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
4. செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள்.
5. பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.
6. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.
7.கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கி பாதத்தில் வெடிப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
8.விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.
9 வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.
No comments:
Post a Comment