கொரோனா தடூப்பூசி செலுத்தப்போகிறீர்களா? - கட்டாயம் இதை படியுங்கள் - Asiriyar.Net

Wednesday, March 24, 2021

கொரோனா தடூப்பூசி செலுத்தப்போகிறீர்களா? - கட்டாயம் இதை படியுங்கள்

 



கொரோனா தடூப்பூசி செலுத்தப்போகிறீர்களா? 






எப்போதாவது மது குடிப்பவர்‌ கள்‌ தடுப்பூசி செலுத்திய நாளில்‌ குடிக்க வேண்டாம்‌. 


தினமும்‌ குடிப்பவர்கள்‌, முன்னதாக 2 நாட்களும்‌, பின்‌ 14 நாட்களும்‌ குடிக்க வேண்டாம்‌. 


ஊசி செலுத்திக்கொண்ட நாளில்‌ புகைக்க வேண்டாம்‌. 


ஊசி  செலுத்திக்கொண்டவர்‌ கள்‌ குடும்ப மருத்துவரை ஆலோசித்த பின்‌ பிற நோய்‌ களுக்கான ஊசியை செலுத்திக்கொள்ளலாம்‌. 



முதல்‌ தவணை ஊசி செலுத்திய பின்‌, 9௦ நாட்களுக்கு தடுப்பு சக்தி கிடைக்கும்‌. பின்‌ குறையும்‌. இரண்டாவது தவணை ஊசி செலுத்திய பின்‌ முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது. 


கொரோனா தாக்கி குணமானவர்‌ கள்‌, பிளாஸ்மா சிகிச்சை பெற்ற வர்கள்‌ 12 வாரங்கள்‌ கழித்து ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 


உயர்‌ ரத்த அழுத்தம்‌, இருதய நோய்‌, சர்க்கரை நோய்‌, சிறுநீரக நோயாளிகள்‌ அவற்‌ றிற்கு மருந்து சாப்பிடுபவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 



பைபாஸ்‌ ஆப்பரேஷன்‌ செய்‌தவர்கள்‌, ஸ்டென்ட்‌ பொருத்‌ உ கர்ப்பிணிகள்‌ திக்கொண்டவர்கள்‌, டயாலிசிஸ்‌ சிகிச்சை பெறுபவர்கள்‌ ஊசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌. 


இருதய நோய்க்கு ஆஸ்பிரின்‌, குளோபிடோகிரில்‌, டிக்கா கிரிலர்‌ போன்ற மாத்திரைகள்‌ எடுத்துக்கொள்பவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. ஹெப்பாரின்‌, வார்பாரின்‌, அசிட்ரோம்‌ போன்ற ரத்த உறைவுத்‌ தடுப்பு மருந்துக ளைப்‌ பயன்படுத்துபவர்கள்‌ ஊசி செலுத்துவதற்கு முந்தைய நாளிலும்‌ ஊசி செலுத்திக்‌ கொள்ளும்‌ நாளிலும்‌ அவற்றைப்‌ பயன்படுத்த வேண்டாம்‌. 


பக்கவாதம்‌, மன நோய்‌, வலிப்பு நோய்‌, பார்க்கின்சன்‌ நோய்‌, மறதி நோய்‌, அல்சீமர்‌ நோய்‌ போன்ற மூளை, மனம்‌, நரம்பு நோய்களுக்கு சிகிச்சை பெறு பவர்கள்‌, ஊசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌. 



வழக்கமான மாத்திரைகளை நிறுத்த வேண்டியதில்லை. ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, ஒவ்வாமை தோல்‌ நோய்கள்‌, மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 


ஊசி செலுத்திக்கொண்ட பெண்‌ ‌ 6 முதல்‌ 8 வாரங்கள்‌ கழித்து கர்ப்பத்துக்குத்‌ தயாராகலாம்‌. 


சிறுநீரக மாற்றுச்‌ சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை' மேற்கொண்டவர்‌ கள்‌ குடும்ப மருத்துவரிடம்‌ ஆலோசனை பெறவும்‌. 



புற்றுநோய்‌ சிகிச்சை பெறுபவர்கள்‌ புற்றுநோய்‌ சிறப்பு மருத்துவரின்‌ ஆலோசனை பெறவும்‌. 


தடுப்பூசிக்குப்பின்‌ வலி நிவாரணி மாத்திரைகள்‌ எடுக்க வேண்டியிருந்தால்‌ குடும்ப மருத்துவரின்‌ ஆலோசனை பெறவும்‌. 


ஊசி செலுத்திய இரண்டு நாட்களுக்கு பின்‌ எளிமையான உடற்பயிற்சி செய்யலாம்‌. 


ஒரு வாரத்திற்கு பின்‌ கடுமையான பயிற்சிகள்‌ செய்யலாம்‌. 


டாக்டர்‌ கு.கணேசன்‌ ராஜபாளையம்‌














No comments:

Post a Comment

Post Top Ad