219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் - Asiriyar.Net

Tuesday, March 30, 2021

219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

 


சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பணிக்கான பயிற்சியில் பங்கேற்காத, 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடக்க உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி சட்டசபை தேர்தல் பணிபுரிய, 3,567 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 
இந்நிலையில், அவர்களுக்கான தேர்தல் பணிக்கான 2ம்கட்ட பயிற்சி 19ம் தேதி  அளிக்கப்பட்டது. இதில், எந்த வித அறிவிப்பும் இன்றி பயிற்சியில், 219 பேர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு, காரணம் கேட்பு குறிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Post Top Ad