தேர்தல் பணி பார்க்கும் நாட்களை தவிர மற்ற நாட்களில், 'ஆன்லைன்' வழி பாட வகுப்புகளை நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளும், பிரசாரமும் தீவிரம் அடைந்துள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஓட்டுச் சாவடி அலுவலர்கள் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு, நான்கு கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையில், வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி வகுப்புகளையும் நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தேர்தல் பணி இல்லாத நாட்களில், ஆன்லைன் வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். பாட திட்டத்தில் உள்ள பாடங்களை, மாணவர்களுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment