தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (58). இவர், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் குழாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், மார்ச் 19-ம் தேதியன்று மாலை, கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.ரேகா பிரியதர்ஷிணியுடன் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார்.
அத்தகவல் வாட்ஸ்அப்பில் பரவியது. அதனையடுத்து, விடியோ ஆதாரத்துடன், இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. இராமனுக்கு புகார் சென்றது. அதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி, சாகுல் அமீதை திங்கள்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment