தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: ஐகோர்ட் புதிய உத்தரவு - Asiriyar.Net

Tuesday, March 23, 2021

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: ஐகோர்ட் புதிய உத்தரவு

 






 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் மற்றும் நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தம் செல்லுபடியாகும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



மதுரை மாவட்டம், திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:தமிழ் வழியில் படித்தோருக்கு, மாநில அரசுப் பணியில், 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. குரூப் 1 தேர்விற்கு, டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி, 20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய - பி.எஸ்.டி.எம்., சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை.கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்து, பல்கலை தொலைநிலைக் கல்வியில், கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெறுகின்றனர்.



தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக்கல்வி, கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார். பல கட்ட விசாரணைக்கு பின், நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:ஒரு பணிக்கு, 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டால், அவ்வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப் படிப்பு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டால் அக்கல்வி முழுவதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.



இதை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறையின் ஒவ்வொரு நிலையிலும் பின்பற்ற வேண்டும்.தமிழ்வழி அல்லது எந்த பயிற்று மொழியில் ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றார் என்பதை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு கல்விச் சான்றுகளில் குறிப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




No comments:

Post a Comment

Post Top Ad