சட்டசபை தேர்தல் பணிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சில மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது. 'தேர்தல் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அனைத்து அரசு பணி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் சீனிவாசன் வலியுறுத்தினார். இதையடுத்து, தேர்தல் பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, சாஹு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment