ஏப்., 7 விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Monday, March 29, 2021

ஏப்., 7 விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

 


சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.


இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த பல ஆசிரியர்களுக்கு, விண்ணப்பித்தும் தபால் ஓட்டு கிடைக்கவில்லை. அவர்களின் சட்டசபை தொகுதியும் பிரித்து காட்டப்படவில்லை. கடைசி தேர்தல் வகுப்புக்கு முன் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு, காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடப்பதால், தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். கொரோனா பரவல் காலமாக, தேர்தல் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும். தேர்தலை முடித்து, அதற்கான பொருட்களை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த நாள் வரை நடப்பதால், தேர்தல் பணி பார்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏப்.,7ல் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad