தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநா் மு.பழனிசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளபடி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீா் வசதிகளின் விவரங்களை அரசின் ‘சாகன்’ தளத்தில் மாதந்தோறும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை மாதந்தோறும் ‘சாகன்’ தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment