பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இயக்குநர் உத்தரவு! - Asiriyar.Net

Tuesday, March 30, 2021

பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இயக்குநர் உத்தரவு!

 அகரம் அறக்கட்டளை நிறுவனம் , அகரம் விதைத் திட்டம் -2021 எனும் திட்டத்தினை , இக்கல்வி ஆண்டில் ( 2020-2021 ) செயல்படுத்தும் வகையில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் , பெற்றோரை இழந்தவர்கள் , வறுமையில் உழல்பவர்கள் , மாற்றுத் திறனாளிகள் , விளையாட்டு , கலை என கல்வி இணைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள் , கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து , அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்திலுள்ள , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் , மேற்படி அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதுவாக , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் , பள்ளிகளில் கற்றல் / கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Click Here To Download - Agaram Foundation Scholarship - Application Form And Instructions - Pdf

Post Top Ad