கட்சி விசுவாச ஆரியர்கள் பட்டியல் சேகரிப்பு துவக்கம்
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர் கள் குறித்த விபரங்களை, கல்வித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர் தல், மாநிலம் முழுதும், ஒரே கட்டமாக, ஏப்., ஈல் நடக்கிறது. ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத் துவதற்கான பணிகளும் துவங்கியுள்ளன.
மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளி லும் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்; அனுபவ விபரங்கள் சேகரிக்கப்படு கின்றன. அனுபவம் அடிப் படையில், ஓட்டுச்சாவடி பணிகளில் ஈடுபடுத்த, தேர்தல் துறைக்கு, ஆசி ரியர்களின் பெயர் பரிந்து ரைக்கப்பட உள்ளது.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முன், அவர்களின் நேர்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படு கிறது. சிலர் தனிப்பட்ட முறையில் இல்லாமல், தங்கள் பதவியை பயன்ப டுத்தி, ஏதாவது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா என்பதும் ஆய்வு செய்யப் படுகிறது.
இதற்காக, அரசியல் கட்சிகளில் உறுப்பினராக உள்ள, மற்றும் அரசியல் கட்சி சார்ந்த சங்கங்களை நடத்தும் ஆசிரியராக ன் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு, தேர்தல் துறை யிடம் ஒப்படைக் கப்படும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.